சூது கவ்வும். 2 .
சூது கவ்வும் முதல் பாகத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார். விஜயசேதுபதி,அசோக் செல்வன் கருணாகரன் இன்னும் சிலர் இந்த படத்தின் வெற்றிக்கு உதவியாக இருந்தார்கள்.
அந்த வெற்றிப் போதையில் எடுக்கப்பட்ட இரண்டாம் பாகம் இது.?எஸ். ஜெ. அர்ஜூன் எனும் புதியவர் இயக்கியிருக்கிறார். இவருக்கு மிர்ச்சி சிவா ,கருணாகரன்,வாகை சந்திரசேகர், ராதா ரவி ,எம். எஸ். பாஸ்கர் ஆகியோர் வெற்றி பெற உதவியாக இருக்கிறார்களா ?
அவர்களை காப்பாற்றிக்கொள்ளவே படாத பாடு படுகிறார்கள். பாவமாக இருந்தது. மிர்ச்சி சிவா ஒரு ஆள் போதாது என்று இன்னொரு ஆளாக கருணாகரனை இறக்கி விட்டிருக்கிறார்கள். இரண்டு பேரும் சேர்ந்து அடித்த அடியில் உடம்பு வீங்கிக் கிடக்கிறது.
கதையை எழுதியவர் கன்னித்தீவு வாசிப்பவர் போலத் தெரியிது. கற்பனை காதலியின் சாவுக்கு காரணமான கருணாகரனை பழி தீர்க்க மிர்ச்சி சிவா துடிக்க ,இவர்களை பிடிக்க போலீஸ் அதிகாரி வெயிட்டிங், நெடிய கோமாவில் கிடந்த வாகையாருக்கு நினைவு திரும்ப ராதா ரவியைப் பார்த்ததும் பொங்குகிறது கோபம். ஊழல் வாதி ராதா ரவி எப்படி சி. எம். ஆனார் என்கிற காண்டு. புது கட்சி ,பிரசாரம் ,ஆட்சி கவிழ்ப்பு . இப்படி பரமபதம் ஆடி .. அட போங்கப்பா !
ஹீரோயின் ஹரிசா ஜஸ்டின் .
ஒளிப்பதிவாளர் கார்த்திக் தில்லை.
எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மற்றும் ஹரி எஸ்.ஆர்.ஆகியோர் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள்.அதான் சவுண்டு ஓவர்.
சூது கவ்வும் 2.சோதனை .
–தேவிமணி