சமீப காலமாக தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் நடிகை நயன் தாரா தனுசுடனான மோதலுக்கு பிறகு கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளாகி வருகிறார். இந்நிலையில்,தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “நானும் விக்னேஷ் சிவனும் சேராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் அவ்வப்போது நினைத்ததுண்டு. இப்போதும் நான் குற்ற உணர்ச்சியில்தான் இருக்கிறேன். ஏனெனில் அவரை இந்த உறவுக்குள் இழுத்தது நான்தான். அவரின் வாழ்க்கையில் நான் இல்லாமல் இருந்திருந்தால் அவருக்கென்று தனியாக ஒரு பெயர் இருந்திருக்கும். இயக்குநர், பாடலாசிரியர் என அனைத்திலும் அவருக்கென ஒரு அடையாளம் இருந்திருக்கும்.விக்னேஷ் சிவன் ரொம்பவே நல்ல மனிதர். அவரை போல் ஒருவர் இருக்க முடியுமா என்று என்னிடம் கேட்டால் அது எனக்கு தெரியவில்லை. ஒருவர் மீது இருக்கும் அன்பும், மரியாதையும் அவர்கள் சந்திக்கும் நெகட்டிவ் விஷயங்களால் காணாமல் போய்விடுகிறது. தனக்கு சமமாக இருப்பவர்களை திருமணம் செய்ய வேண்டும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆடம்பரத்தையோ, வெற்றியையோ நினைத்து நாங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. என்னையும் அவரையும் ஒப்பிட்டு பேசுவதில் நியாயமே இல்லை”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.