அமெரிக்காவில் சிவராஜ்குமாருக்கு அறுவை சிகிச்சை!

கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் புற்று நோய் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ள தாவது,”அமெரிக்காவில் இருக்கும் மயாமி புற்றுநோய் மையத்தில் டிசம்பர் 24ம் தேதி எனக்கு அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது. டாக்டர் முருகேஷ் என். மனோகர் தான் எனக்கு அறுவை சிகிச்சை செய்யவிருக்கிறார். அவர் மிகவும் பிரபலமான மருத்துவர், கைராசிக்காரர்.அவரிடம் பேசியபோது எதற்கும் பயப்படாதீங்க, எல்லாம் நல்லபடியாக நடக்கும் என நம்பிக்கை கொடுத்தார். நடிகர் சுதீப் என் வீட்டிற்கு வந்து என்னை சந்தித்து பேசினார்.எப்படி போகிறீர்களோ அப்படியே திரும்பி வருவீர்கள் என்றார் சுதீப். ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். கடந்த 2 நாட்களாக எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் எல்லாம் நல்லபடியாக இருக்கிறது. அது எனக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறது.நான் ஒரு மாத காலம் அமெரிக்காவில் இருக்க திட்டமிட்டிருக்கிறேன். ஜனவரி 26ம் தேதி இந்தியாவுக்கு வந்துவிடுவேன். ஜனவரி 25ம் தேதி விமானத்தில் ஏறி 26ம் தேதி பெங்களூருக்கு வந்துவிடுவேன்.மனைவி கீதாவும், என் இளைய மகள் நிவேதிதாவும் எனக்கு துணைக்கு வருகிறார்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்