தட்ஸ் ஆல் !
இந்தப்படம் மலையாளக் கரையோரம் எடுக்கப்பட்டது. சுரேஷ் குமார் எழுதி இயக்கிய காதல் படம். ஆன்சன் பால் ,ரெபோ மோனிகா முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
“உனக்கும் எனக்கும் ஒத்துவராது ,விலகிப் போ “என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி ,அனலைக் கக்கும் பெண்ணுக்கும் ,பணக்கார வெட்டி ஆபிசர் வாலிபனுக்கும் இடையில் நடக்கிற கதை. நமக்கும் புதுசு இல்ல,அவிட தேசத்துக்கும் புதிசு இல்லா.!இடைவேளைக்குப் பின்னர் வெடி வைத்திருக்கிறார்கள். ரசிக்க முடிகிறது. செலவு செய்திருக்கிறார்கள். படத்தில் தெரிகிறது. புத்தி சொல்லுகிறேன் பேர்வழி என்று அறிவுரை -அறவுரை இல்லாமல் இயல்பாக கதை போகிறது. ஆறுதல். வில்லன்கள் இல்லாதது நிம்மதி.
சரி ,படம் எப்படி?
மழையில் நனைவது நமக்கு பழகிப் போனதுதான்.!
–தேவிமணி