இப்படி எச்சரிப்பது ஸ்பாய்லர் யாரும் இல்லை.இயக்குநர் உபேந்திரா தான்.! படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக இந்த வாசகத்தை போட்டு அதிரடி கிளப்பி இருக்கிறார். ‘யு ஐ ‘என்கிற அந்த படத்தில் அப்படி என்னதான் சொல்லி இருக்கிறார்கள்?
இது ஒரு ஃபேண்டஸி படம். அரசியல் ,சமூகம் இவைகளை கலந்து கட்டி நக்கல் பண்ணி நையாண்டியினால் துவைத்து எடுத்திருக்கிறார்கள்.காட்சிகளில் இயல்பான நாட்டு நடப்பு.இதனால்தான் அப்படி ஒரு வேடிக்கை எச்சரிக்கை. அரசு கொடுக்கிற இலவசங்களை நேர்மையுடன் துகிலுரிந்திருக்கிறார் இயக்குநர்.விமர்சகர்களையும் விட்டு வைக்கவில்லை. ஒன்றிய அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்திருக்கிறார்கள்.
நடிகர் இயக்குநர் உபேந்திராவின் ஐடியா சிறப்புடன் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.இரட்டை வேடம் . சத்யா ,கல்கி என நேரெதிரான கேரக்டர்கள்.
ஹீரோயினாக ரீஷ்மா . கமர்ஷியல் ராணி. கவர்ச்சி நடனம். தமன்னாவே குலுக்கி கொட்டுகிறபோது ரீஷ் ஆடினால் அது என்ன கலாச்சார கேடாகிவிடுமா ?
இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே!
ஒளிப்பதிவாளர் எச்.சி.வேணுகோபாலின் ஒளிப்பதிவினை விட, வி.எஃப்.எக்ஸ் கலைஞருக்கும், கலை இயக்குநருக்கும் தான் வேலை அதிகம்.
“கடவுள் வந்தால் மதம் ,சாதி சண்டை எல்லாம் வரும் .அதனால் கடவுள் வேண்டாம். “என்று என்று சத்யா கூறி மக்களை வாழவைத்தால் ,கல்கி நேரெதிர் . கடவுள் பெயரால் மக்களை பிளவு படுத்துகிறார் . நகை முரண் . சிறப்பு.
யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை நல்ல நோக்குடன்தான் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் யாரும் கேட்கப் போவதில்லை !
படம் எப்படி ?
காசுக்கு நட்டமில்லை . கண்ணுக்கு நோவும் இல்லை .
–தேவிமணி .