திரிஷாவுக்கு ‘துப்பாக்கி சல்யூட் ‘ அடிங்க ? ? வாம்மா ,மின்னல்.!

ஒரு நடிகை நாடாளக் கூடாதா? திரிஷா  ‘சி. எம்’ ஆகிவிட்டால் காவல்துறை சல்யூட் அடிக்காதா?  

காவல்துறை. 303 ஓல்ட் ரைபிளை  தூக்கி தோளில் சாத்தி ரைபிள் ‘பட்டில்’சப்  னு அடிகொடுக்க மாட்டாதா ?

இதுக்காக  பாரதியாரின் மிளகாய்ப் பழ சாமியாரை கூட்டி வந்து பட்டி மன்றமா  நடத்தமுடியும்  ?

நான் திரிஷாவின் ஆசையை வரவேற்கிறேன். கோ ஸ்டார் விஜய் யை நாடு தூக்கி வைத்து கொண்டாடுகிறதே? நடிகனுக்கு ஆசை வரலாம் . அதே ஆசை நடிகைக்கு வரக்கூடாது என்று பகடி பேசுவது எந்த ஊரு நியாயம் ? 

பெண் முதல்வர்கள் வரிசையில் நம்ம திரிஷா மூணாவது ஆளாக இருந்து விட்டுப் போகட்டும். 

கொடி படத்தில் தம்பி தனுஷ் ஒரு கட்சி. காதலி திரிஷா எதிர்க்கட்சி. இந்த படத்தில முக்கியமான சீன் காதலன் தனுஷை காதலி திரிஷாவே  போட்டுத் தள்ளுறதுதான். அரசியலில் இதெல்லாம் நடக்காம போகாதுய்யா என்கிற கதாசிரியரின் நம்பிக்கையில் உருவாக்கிய சீன்.

“கொடி எல்லாத்தையும்  நம்பி நல்லது பண்ற மொரட்டு பய. அன்பு (திரிஷா.)தனக்கு என்ன வேணுமோ எப்படியாவது சாதிக்கிற புத்திசாலி. இப்ப மொரட்டுத்தனமும் புத்திசாலித்தனமும் ஒன்னாச் சேர்ந்த மொத்த உருவமா நிக்கிறாம்மா “என்று கொடி படத்தில் திரிஷாவை சித்தரித்திருக்கிறார்கள் . அது உண்மைதான். 

நண்பர் விஜய்யின் அட்வைஸ் படி ஆசையை வெளியிட்டிருக்கலாம் ,

வாம்மா மின்னல் பொறுப்புகள் வெயிட்டிங் !

–தேவிமணி