தப்பியோட விட்டு விடுகிறார்கள்.
இதுதான் சாமான்யர்களின் இன்றைய மனநிலை.!
ஆனால் கோட்டி போன்ற பாலாவின் படைப்பு அவனைத் தப்பியோட அனுமதிப்பதில்லை . அவனை தண்டித்தே ஆக வேண்டும் ,என வெறி கொண்டு அலைகிறது . கோட்டி நல்லவன். முந்தைய படமான பிதாமகன் சீயான் விக்ரம் சாயல் உள்ளவன். அவனுடைய நியாய சபையே வேறு .! சுனாமியில் தனித்து விடப்பட்ட சிறுமியை சொந்த ரத்த உறவாக எடுத்துக்கொண்டு வாழ்கிறவன். பிதாமகன் சித்தனும் வணங்கான் கோட்டியும் சிறுமை கண்டு பொங்குகிறவர்களாவே கருதுகிறேன் .
தற்போது கதை ஓரளவு புரிந்திருக்கும்., பெண்களின் நிர்வாணத்தை ரசிப்பவர்களுக்கு கோட்டி எமன் .இந்த கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார் அருண் விஜய். என்னதான் சட்டங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்தாலும் அதிலும் ஓட்டை போடுகிறவர்கள் இருக்கிறார்கள் என்பதை தைரியமாக சுட்டுகிற பாலாவுக்கு வாழ்த்துகள் . போக்சோ சட்டம் தவறாக பயன்படுவதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். அருண் குமாரின் தங்கையாக வருகிற ரிதா நல்ல கேரக்டர். சரியான தேர்வு . வாழ்த்துகள்.
விரட்டி விரட்டி காதலிக்கிற பெண்ணாக ரோஷினி . நல்ல துரு துருப்பு . லைலாவை பிரதிபலிக்கிறாரோ ?நினைவு வரத்தான் செய்கிறது. சிறப்பாக நடித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட முற் பாதியில் 3 பாடல்களை கடந்து விடுகிறோம். சண்டைக் காட்சிகளும் பெரிதும் சிறிதுமாக பாலாவின் ரசனையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இடைவேளைக்குப் பின்னர் பாலா பரபரப்பாக்கி விடுகிறார். கோர்ட்டு சீன். மிஷ்கின் கோபம் என நாட்டு நிலைமையை வெட்ட வெளியில் போட்டு தாக்குகிறார். இதைத்தான் பாலா எதிர் பார்க்கிறார்கள். முற்பாதியிலும் இந்த வித்தையை நிகழ்த்தி இருக்கலாம்.
‘ஆய்வாளர் ஆயவே இல்லையா!’, என்று நீதிபதி மிஷ்கின் கோர்ட்டில் வைத்து காவல்துறையின் சட்டையை கழட்டுகிறபோதும் சரி , ‘அவர்கள் எங்கே பிடிச்சாய்ங்க , நான்தான் சரணடைந்தேன்… என்னைப் பார்த்து அவர்கள் பயந்துவிட்டனர்’ என்று அருண் விஜய் எள்ளி நகையாடுகிறபோதும்’ இதற்குத்தானே ஆசைப்பட்டோம்’என்று சத்தம் போடத்தோன்றுகிறது. நீதிபதியாக வரும் மிஷ்கின் ‘லார்ட்ஷிப்’ என கூப்பிட வேண்டாம், சட்டத்தில் அப்படியெல்லாம் சொல்லவே இல்லை, ஐயான்னு சொல்லுங்க இல்லேன்னா சாருனு கூப்பிடுங்க’ என்பதை வேறு யார் சொல்லியருந்தாலும் எடுபட்டிருக்காது . பக்கா மிஷ்கின் ஸ்டைல்.!
‘எல்லாருமா சேர்ந்து ஒரு நல்லவனை சிலுவையில் அறைந்துவிடாதீர்கள்’, ‘எங்களுக்கு கண்ணுதான் இல்லை… ஆனால் கண்ணீர் வரும்’, ‘எல்லாம் நல்லா இருக்கிற உங்களால மாற்றுத் திறனாளிகளான எங்களோட வலியை எப்படி உணர முடியும்?’ போன்ற வசனங்களால் கவனிக்க வைத்திருக்கிற இயக்குநர் அந்த கிறிஸ்துவ பாதர் நெற்றியில் குங்குமம் வைத்திருக்கிற வேண்டாம். சங்கித்தனமாக இருக்கிறது சகோதரா !சங்கிகளை முட்டுச்சந்தில் விட்டு துவப்பதாக அவர்களின் புலம்பல் கேட்கிறது பாலா !கிணற்றில் இருந்து தந்தை பெரியாரையும் விநாயகரையும் எடுத்து வருகிற காட்சி ஒன்றே போதும் . பிற்போக்காளர்கள் துவண்டு போவார்கள்.
மனதில் நிற்கிற மற்றொரு கேரக்டர் சமுத்திரக்கனி. வித்தியாசமான பார்வை என்றாலும் அதுதான் இயல்பு.
இசை ஜி. வி. பிரகாஷ் .இசை .அருமை. ஆர். பி. குரு தேவ் ஒளிப்பதிவு. சிறப்பு.
வணங்கான் , பாலா !
—தேவிமணி