ரவி மோகன், நித்யா மேனன் இருவரும் நாயகன் நாயகியாக நடித்திருக்க, இவர்களுடன் வினய், யோகிபாபு, T.J.பானு, ‘இயக்குநர்’ லால், ஜான் கோக்கன், லட்சுமி ராமகிருஷ்ணன், ‘பாடகர்’ மனோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுதி, இயக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்க, கவேமிக் U ஆரி ஒளிப்பதிவு செய்திருக்க படத் தொகுப்பினை லாரன்ஸ் கிஷோர் செய்துள்ளார்.
ரவி மோகன், பில்டிங் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தில் சிறந்த ஆர்க்கிடெக்ட். இவரும், ‘மாடலிங்’ செய்து வரும் TJ பானுவும் காதலித்து வருகின்றனர். இருவரும் கல்யணம் செய்து கொள்ள முடிவு செய்கின்றனர். ஆனால், TJ ஆனுவுக்கு குழந்தை பெற்று கொள்வதில் விருப்பம் இல்லை. இதனால், கல்யாணம் காலாவதியாகிறது.
ரவி மோகனின் நண்பர் வினய். அவர் ஒரு கே (Gay). ரவி மோகனின் ரவியின் நண்பரான வினய், விந்து தானம் செய்ய விருப்பப் படுகிறார். அப்படி செல்லும் போது இவர்களின் இன்னொரு நண்பரான யோகிபாபுவும் சேர்ந்து மூவரும் விந்து தானம் (sperm donation) செய்கிறார்கள்.
ஜான் கோக்கன் – நித்யா மேனன் இருவரும் காதலர்கள். இவர்கள் இருவருக்கும் சூழ்நிலை காரணமாக ரிஜிஸ்டெர் மேரேஜ் நடைபெறுகிறது. இந்நிலையில், ஜான் கோக்கன் மற்றொரு பெண்ணுடன் உறவில் இருப்பதை நித்யா மேனன் பார்த்து விடுகிறார். இதனால், இருவருக்கும் டைவர்ஸ் ஆகிறது. இதனால், ஆண்களின் மீது கடும் கோபத்துடன் இருக்கிறார்.
அதோடு டெஸ்ட் டியூப் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளவும் ஆர்வம் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து, தன் வயிற்றில் விந்து தானம் பெற்ற கருவினை சுமக்கிறார். தன் கருவுக்கு விந்து தானம் செய்தது யார்? என தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார். அதைத் தொடர்ந்து பல சுவாரசியமான சம்பவங்கள் நடக்கிறது. அது என்னென்ன? என்பது தான், காதலிக்க நேரமில்லை.
நாயகி நித்யா மேனனுக்கு அழுத்தமான கதாபாத்திரம். அதை சிரமின்றி வெகு இயல்பாக கையாண்டிருப்பது அவருடைய நடிப்புக்கு சாட்சி. முதலிருந்து கடைசி வரை, ஒவ்வொரு காட்சிகளுக்கும் பலம் சேர்க்கிறார். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய இருப்பினை பதிவு செய்வது போல் இந்தப்படத்திலும் அழுத்தமாக பதிவு செய்கிறார். தான் கர்ப்பமுற்றிருப்பதை, அவருடைய பெற்றோருக்கு சொல்லும் காட்சி, உதாரணம். ரவி மோகனுடனான காட்சிகளும் சூப்பர்.
நாயகன் ரவி மோகனுக்கு இளமை திரும்புகிறதா?, தெரியவில்லை. அழகாக தெரிகிறார். ஆக்ஷன் காட்சிகள் இல்லாத, ஆர்ப்பாட்டமில்லாத இளைஞனாகவும் அமைதியான இளைஞனாக வந்து ரசிகர், ரசிககளை வெகுவாக கவர்ந்து விடுகிறார். எமோஷனலான காதல் காட்சிகளிலும், சிறுவனுடனான காட்சிகளிலும் சிறப்பு சேர்த்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில், நித்யா மேனனுடனான காட்சியில் அனைவரையும் கவர்ந்து விடுகிறார்.
ரவி மோகனின் காதலியாக T.J.பானு. மாடலாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கேற்ற சரியான தேர்வு.
நண்பர்களாக நடித்திருக்கும் வினய், யோகி பாபு ஆகியோர் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர் கவேமிக் U ஆரியின் ஒளிப்பதிவு சிறப்பு சேர்த்திருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் பலம் சேர்த்துள்ளது.
இது தவிர, பொதுவாக சொல்வதாக இருந்தால், தொழிநுட்பங்களில் பலமாகவே இருக்கிறது.
படத்தின் பலவீனம் பற்றி சொல்வதாக இருந்தால், இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருப்பதே. படத்தில் சொல்லப்பட்டிருக்கும் பல முற்போக்கான அணுகுமுறை, பலரால் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி புரிந்து கொள்ளும் மனோநிலை இருந்தால், இந்தப்படம் உங்களுக்கு ஃபீல் கொடுக்கும்!