ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் வென்ற அஜித் மகன்!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி வரும் பிப்ரவரி 6ஆம் தேதியும், ‘குட் பேட் அக்லி’ வரும் ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரத்திலும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. இதற்கிடையில், அஜித்குமார் வரும் அக்டோபர் மாதம் வரையிலான சர்வதேச கார் பந்தயங்களில் கலந்து கொள்ளவுள்ளார். ஏற்கனவே துபாயில் நடந்த கார் ரேஸில் அவரது ரேஸிங் அணி 3 வது இடத்தைபிடித்து அசத்தியது.குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட அஜித்குமாரின் மகன் ஆத்விக், பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில், ஓட்டப்பந்தயம் மற்றும் தொடர் ஓட்டப் பந்தயத்தில் முதல் இடம் வென்றுள்ளார். இது தொடர்பான வீடியோவை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இணையத்தில் தீயாக பரவி வரும் இவ்வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.