அமெரிக்காவிலிருந்து கமல்ஹாசன் இன்று காலை சென்னை திரும்பினார்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ஏ.ஐ. தொழில்நுட்ப படிப்பிற்காக அமெரிக்கா சென்றிருந்தார். படிப்பு முடிந்து 5 மாதத்திற்கு பிறகு  இன்று சென்னை திரும்பினார்.
 சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘தக் லைஃப்’ படம் எந்த நிலையில் இருக்கிறது என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வருகிற ஜூன் 5ந் தேதி தக் லைஃப் படம் ரிலீஸ் ஆகும் என கூறினார். பின்னர் ‘விக்ரம் 2’ வருமா என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு தான் தற்போது வேறு ஒரு ஸ்கிரிப்டை எழுதி முடித்து வந்திருப்பதாக கூறிச் சென்றார்.நடிகர் கமல்ஹாசன் கைவசம் தற்போது தக் லைஃப், இந்தியன் 3, கல்கி 2, அன்பறிவு இயக்கும் படம் ஆகியவை உள்ளன. இதில் தக் லைஃப் படத்தை மணிரத்னம் இயக்கி இருக்கிறார். இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. அதேபோல் ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்துள்ள இந்தியன் 3 படமும் இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டாதாக கூறப்பட்டாலும்  இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட உள்ளது