உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக நிலவி வரும் மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில்,முரளி.என்.ராமசாமி தலைமையில் இயங்கி வரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்,ஆர்.கே. செல்வமணி தலைமையிலான பெப்சி அமைப்புக்கு போட்டியாக “தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்” உதயமாக உள்ளதாகவும்,இதன் மூலம் தயாரிப்பாளர்கள் தங்களின் திரைப்படங்களுக்கு விரும்பும் தொழிலாளர்களை வைத்து தயாரித்துக் கொள்ளலாம் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது இது குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் கடந்த 20.12.2024 அன்று பத்திரிகை வாயிலாக அறிவித்துள்ளது. மேலும், உறுப்பினர்களை வைத்து சம்மேளன வேலை செய்யும் சம்மேளனம் தயாரிப்பாளர்களுடன் தொழிலாளர்கள் ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்கள். அதனை சம்மேளனத்தில் தொடர்ந்து, தொழிலாளர்கள் இணைக்கப்பட்டுள்ள சங்கங்களுக்கு கடந்த 27.01.2025 அன்று சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பியுள்ளார்கள். அதில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்ததை சுட்டிகாட்டி மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்கள்.