ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக டிராகன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் டிராகன் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் காதல் தோல்வி பாடல் ஒன்றை நடிகர் சிம்பு பாடியுள்ளார் இப்பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடதக்கது வரும் காதலர் தினத்தை குறி வைத்து வெளியாகவுள்ள இப்படம் குறித்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கூறுகையில்,” நாம் கடந்து வந்த கல்லூரி வாழ்க்கையில் சில மறக்க முடியாத சம்பவங்களை சொல்லும் கதையாக டிராகன் உருவாகியுள்ளது . 2016 முதல் 2025 வரையிலான காலகட்டங்களில் சென்னை- வேலூர் என பயணிக்கும் கதையாக உருவாகியுள்ளது. எனது கல்லூரி வாழ்க்கையில் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்திருக்கு அதைத்தான் கொஞ்சம் கற்பனை கலந்து இந்த டிராகன் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். நம்ம கதையின் நாயகன் ராகவனின் பட்டப் பெயர் தான் ‘டிராகன்’ கல்லூரியில் ‘கெத்தா’ வலம் வரும் ஒரு பையன். எல்லோரது கவனமும் தன் மீது இருக்க வேண்டும் என திட்டமிட்டு, ஒவ்வொரு செயல்களையும் செய்பவன். அப்படி கல்லூரி வாழ்க்கையில் எல்லோராலும் கவனிக்கப்படும் நபராக இருந்த ராகவன், கல்லூரி வாழ்க்கையை விட்டு வெளியே வந்த பின் அவனது நிலைமை என்னவாகிறது என்பதை சொல்லும் படமாக டிராகன் உருவாகியுள்ளது. கல்லூரியின் முதல்வர் மயில்வாகனனாக மிஸ்கின். ராகவனின் காதலி பல்லவியாக கயாடு லோஹர் , கீர்த்தியாக அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்க ,ராகவனின் தந்தையாக ஜார்ஜ் மரியன், ராகவனின் அம்மாவாக சித்ரா தனபால், ஆகியோர் நடித்துள்ளனர் இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார்,கவுதம் மேனன்,வி.ஜே. சித்து,ஹர்ஷத் கான்,மலேசியா முருகேசன் உள்பட பலர் நடித்துள்ளனர் இது கல்லூரி வாழ்க்கையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கோவில் காளை போல் சுற்றி வந்த ஒரு மாணவனின் வெற்றி தோல்வியை பற்றி பேசும் படமாகவும் இருக்கும். கல்லூரி வாழ்க்கையில் எல்லோராலும் கவனிக்கப்படும் நபராக இருந்த ஒருவர் கல்லூரி வாழ்க்கையை விட்டு வெளியே வந்த பின் அவரது நிலைமை என்னவாகிறது என்பதை சொல்லும் படம் தான் டிராகன் என்கிறார்.