பான் இந்திய படங்களான சலார் மற்றும் கல்கி 2898 கிபி ஆகிய படங்களின் மூலம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நடிகர் பிரபாஸ் தற்போது படைப்பாற்றல் மிக்க இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கும் பான் இந்திய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபாஸுற்கு ஜோடியாக நடிகை இமான்வி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் முன்னாள் பிரபல நடிகர்கள் மிதுன் சக்கரவர்த்தி- ஜெயப்பிரதா ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம்-1940களில் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த வரலாற்று புனைவு கதை / மாற்று வரலாறு. போர் மட்டும் தான்…உலகத்திலிருந்து மறைக்கப்பட்ட மற்றும் புதைக்கப்பட்ட அநீதிகளுக்கும், மறக்கப்பட்ட உண்மைகளுக்கும் ஒரே தீர்வு என்று நம்பிய சமூகத்திலிருந்து… அதன் நிழல்களிலிருந்து… எழுந்த ஒரு போர் வீரனின் கதை.என்கிறது படக்குழு. இப்படத்தில் பாலிவுட்நடிகர் அனுபம் கேர் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்து நடிகர் அனுபம் கேர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,”இந்திய சினிமாவின் #பாகுபலியுடன் எனது 544 வது பெயரிடப்படாத படத்தில் இணைந்திருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரே ஒரு #பிரபாஸ், நம்ப முடியாத திறமை மிக்க ஹனு ராகவபுடி இப்படத்தை இயக்கியுள்ளார். ‘இது ஒரு அற்புதமான கதை. வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்? நண்பர்களே! வெற்றி பெறுங்கள்! ஜெய் ஹோ!” என பதிவிட்டிருக்கிறார்.