ஶ்ரீகாந்த், அவரது கதாபாத்திரத்திற்கேற்ப சிறப்பாகவே நடித்திருக்கிறார். நடுத்தர குடும்பத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்று அவர் தவிக்கும் காட்சியிலும், சிட் ஃபண்ட் அதிபர் ராதாரவியிடம் கெஞ்சும் காட்சியிலும், தனது தவறினை உணர்ந்து குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரி நிற்கும் காட்சியிலும், கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
சிந்தியா லூர்துவின் தோற்றம், அவரது அமெரிக்க வாழ் தமிழ்ப் பெண் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நடிப்பினையும் குறை சொல்ல முடியாது.
ஸ்ரீகாந்தின் அப்பா, அம்மாவாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், மீரா கிருஷ்ணன், அக்காவாக நடித்திருக்கும் வினோதினி, நண்பராக நடித்திருக்கும் பிரேம்ஜி மற்றும் கே.பி.ஒய்.சரத், சாம்ஸ், சாந்தினி தமிழரசன், ராதாரவி என அனைவருமெ அவர்களது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசை, ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு ஓகே.
எழுதி, இயக்கியிருக்கும் ஜி.சங்கர், இருப்பதை கொண்டு நிம்மதியான வாழ்க்கையை வாழாலாம். என எம் எஸ் பாஸ்கர் மூலமாக, அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில், ’தினசரி’ ஆடம்பர வாழ்க்கையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கன படம்.