நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா முதன்முறையாக சென்னையில் நடத்திய நடன நிகழ்ச்சியில். தனுஷ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, பாக்கியராஜ், மீனா, அதிதி ஷங்கர், ரம்பா, சாக்ஷி அகர்வால், சாண்டி மாஸ்டர், தனுஷின் மகன்கள் என ஏகப்பட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில் பேட்ட ராப் பாடலுக்கு மேடையில் ஆட்டம் போட்ட பிரபுதேவா அப்படியே கீழே இறங்கி வந்து வடிவேலுவுடன் வைப் செய்ய ஆரம்பித்தார். இருவரும் மங்கி போல வாயை வைத்துக் கொண்டு விதவிதமாக முக பாவனைகளை வெளிப்படுத்தியதை கண்ட ரசிகர்கலின் ஆராவாரமும் கை தட்டலும் அடங்கவே வெகு நேரமானது. முத்தாய்ப்பாக வடிவேலுவின் தலையை தனது கைகளால் கலைத்து விட்டு அவரது மூக்கிலும் வாயிலும் விரலை விட்டு ஆட்டிய பிரபு தேவாவையம், பலியாடு போல,பரிதாபமாக முழித்த வடிவேலுவையும் பார்த்த தனுஷ் மற்றும் அவரது மகன்கள் விழுந்து விழுந்து சிரித்து வைப் செய்த காட்சிகளும் இணையத்தில் தற்போது தீயாக பரவி வருகின்றன. இருவரது சேட்டைகளும் பலரையும் வாய்விட்டு சிரிக்க வைத்தாலும், பொது நிகழ்ச்சியில் இப்படியா? என சிலர் முகம் சுளித்ததையும், முணுமுணுத்ததையும் காண முடிந்தது.புதிய படத்துக்காக விரைவில் வடிவேலு -பிரபு தேவா கூட்டணி இணையலாம் என்கிறார்கள்