A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது செகண்ட் சான்ஸ்…*மகேஷ் சுப்பிரமணியம், அம்மு அபிராமி நடித்துள்ள இப்பாடல் இன்று படக்குழுவினர் கலந்துக்கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது. இளம் நட்சத்திரங்களான ரியோ, மாஸ்டர் மகேந்திரன் மற்றும் சௌந்தர் இவ்விழாவில் கலந்துகொண்டு பாடலை வெளியிட்டு, படக்குழுவை பாரட்டினர்.
இந்நிகழ்வினில் இயக்குநர் சபரி மணிகண்டன் கூறியதாவது…*மகேஷ் மூலம் தான் இந்த புராஜக்ட் ஆரம்பமானது, இதற்காக அவர் மிகக் கடினமான உழைப்பைத் தந்துள்ளார். நீங்கள் நடிகராக ஆசைப்படுகிறீர்கள் நான் இயக்குநராக ஆசைப்படுகிறேன் அதனால் இதில் கண்டிப்பாக கதை இருக்க வேண்டும் என்றேன், முழு அர்ப்பணிப்புடன் உழைப்பைத் தந்தார். மது இன்று தான் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார், கார்த்திக் மது இருவரும் எல்லாவற்றையும் எங்களிடம் நம்பி விட்டு விட்டார், அவருக்கு என் நன்றிகள். அம்மு அபிராமி இந்த பாடலை நம்பி வந்தார், ஷீட்டிங்கில் முழு ஒத்துழைப்பு தந்தார். அவருக்கு என் நன்றி. 10 மணிக்கு சொன்னால் 9 மணிக்கு வந்து விடுவார். ஸ்ரீதர் மாஸ்டர் அவர் நடன அமைப்பு, எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த முழுப் பாடலும் என் கூடவே இருந்தார், அவர் பெயரால் தான் இந்த பாடல் தெரிகிறது அவருக்கு என் நன்றி. என் தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோருமே என் நண்பர்கள். படம் வேலை பார்த்தால் கூட எனக்காக வந்து, செய்தனர். ஜீவி, நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா சுரேஷ்க்கு என் நன்றி, இந்தப்பாடல் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்படி செய்துள்ளோம் நன்றி.
காதலில் நாம் செய்யும் தவறுகள், ஈகோ, அவசரம் நம்மை மீறிய கட்டத்திற்கு இழுத்து காதலை அழித்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒருவனுக்கு அந்த தவறுகளை சரி செய்து கொள்ளும் வகையில் ஒரு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கிறது. அதனை அவன் எப்படி பயன்படுத்திக்கொள்கிறான் என்பது தான் இந்த ஆல்பம் பாடலின் கரு.:”இவ்வாறு அவர் பேசினார்
இப்பாடலின் தீமை உருவாக்கி இன்றைய ரசிகர்கள் கொண்டாடும் வண்ணம் இயக்கியுள்ளார் இயக்குநர் சபரி மணிகண்டன். காதலின் பல்வேறு தருணங்களை தன் பேனாவால் வரலாறாக்கிய கவிப்பேரசு வைரமுத்து, இந்த செகண்ட் சான்ஸ் பாடலை எழுதியுள்ளார். இளம் இசையமைப்பாளர் ஶ்ரீ இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். இசை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் பாடகர்கள் நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் இப்பாடலை பாடியுள்ளனர்.
கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் இளமை துள்ளும் வகையிலான நடன அசைவுகளுடன் அனைவருக்கும் பிடிக்கும்படியான நடன அமைப்பை செய்துள்ளார். ஜோசப் பால் ஒளிப்பதிவு செய்ய, முத்தையன் எடிட்டிங் செய்துள்ளார். கோபிநாத் கலை இயக்கம் செய்துள்ளார். பிரம்மாண்ட பொரிட்செலவில், A Spot Light Entertainment சார்பில் கார்த்திக், மது இப்பாடலை தயாரித்துள்ளனர்.