ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தின் டீசர் வெளியாகி 12 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதில் பில்லா அஜித், அட்டகாசம் அஜித், மங்காத்தா என பல ரெபரன்ஸ்கள் இடம்பிடித்திருக்கின்றன. ஏகே ரொம்ப பேட் ஆன நல்லவன் என்றும் அஜித் பேசும் காட்சிகள் ரசிக்கும் படி உள்ளன.மேலும் ‘கேஜிஎஃப்’ யாஷ் பட அறிமுக பில்டப் காட்சியை போன்றே, அஜித்துக்கும் இப்படத்தில், ஏகே ஒரு ரெட் டிராகன், அவன் போட்ட ரூல்ஸை அவனே பிரேக் பண்ணிட்டு வந்திருக்கான்னா, அவன் மூச்சுலயே முடிச்சுடுவான்” என்று தெறி ‘பில்டப்’ காட்சி இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதை இது தான் என ஒரு தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அது இது தான், “இளமை காலத்தில் கேங்ஸ்டராக இருந்து ஜெயிலுக்கு செல்லும் அஜித், பின்பு ரொம்ப ரொம்ப ‘பேட்’ பாயாக வந்து வில்லன்களை பழிவாங்குவது தான் இப்படத்தின் கதை என்கிறார்கள். .இந்நிலையில், மதுரையிலிருந்து சென்னையிலுள்ள பிரபல திரையரங்கில் டீசர் வெளியீட்டைக் காண வந்த அஜித் ரசிகர்கள் டீசர் வெளியீட்டுக்குப் பின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 2 பவுன் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கியிருக்கின்றனர்.