கடவுள், காதல் கதை உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான இயக்குனர் ஒளிப்பதிவாளர் வேலு பிரபாகரன் கதை, எழுதி இயக்கி வரும் புதிய படத்துக்கு ‘யார் அந்த சார்’? என பெயரிடப்பட்டுள்ளது இப்படத்தின் டேக் லைனாக உண்மை வெளியாகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது . இப்படத்தில் பிரபல வில்லன் நடிகரும் கதாநாயகனுமான மன்சூர் அலிகான் நாயகனாக ,இவருடன் , அனகா, ஸ்வாதி, கிரிஷ்டினா, அனீஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். சபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ஒளிப்பதிவை அசுரன் மேற்கொண்டுள்ளார். விரைவில் இப்படம் குறித்த மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார்கள்.