நடிகர் தனுஷின் 52வது படமும், இயக்குநராக 4 வது படமுமாக உருவாகி வந்த ‘இட்லி கடை’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் முழு வீச்சில் நடந்து வந்த நிலையில் தற்போது முடிவடைந்துள்ளது, இது குறித்த அறிவிப்பை நடிகர் அருண் விஜய் தந்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் இப் படம் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் இப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார். தனுஷ் அருண் விஜய் கூட்டணி அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்டது ‘இட்லி கடை’ என்ற வினோதமான தலைப்பு ஏற்கனவே ரசிகர்களின் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டியுள்ள நிலையில் இப்படத்தின் கதை குறித்து தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் ரகசியம் காத்து வருகின்றனர்