இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தனது சமூக வலைதளத்தில் நீண்ட அறிக்கை :ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்,”என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கிசுகிசு பரவுகிறது. அதில் உண்மை எதுவும் இல்லை. எனினும் ட்விஸ்ட் வைத்து பேசுகின்றனர். இது எனக்கு அதிர்ச்சியை தருகிறது. நான் அமைதியாக இருப்பதால் பலவீனமாக என்று அர்த்தம் கிடையாது. எனது நேர்மை பற்றி கேள்வி எழும் போது நான் கட்டாயமாக பேசி ஆக வேண்டும். எனது பொறுமைக்கும் எல்லை உண்டு. என் நலன் கருதும் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், ரசிகர்களிடம் விவாகரத்து பற்றி கூறிவிட்டேன். அனுதாபத்திற்காக என்னுடைய குழந்தைகளை கருவியாக பயன்படுத்துவதை பொறுத்து கொள்ள முடியாது.
ஆரம்பத்தில் என்னுடைய நண்பராக இருந்த பெண் நான் மூழ்க இருந்த சமயத்தில் என்னை காப்பாற்றி வாழ்வு கொடுத்தார். என்னிடம் வலி, இரத்தம், அழுகை மட்டுமே இருந்த போதிலும் நான் வெறும் காலுடன் வீட்டில் இருந்து வெளியேறிய போது உடன் இருந்தார். சொத்து, சுகம் எதுவும் இல்லாத நிலையிலும் கெனிஷா தயங்காமல் உதவினார். நான் எதிர்கொண்ட எல்லா பிரச்னைகளையும் கவனித்து எனது வாழ்கையிலும் ஒளி இருப்பதாக உணர்த்தியவர், எனக்கு நண்பராக உதவ தொடங்கினார்.
எக்காரணத்திற்காகவும் என்னுடைய பழைய வாழ்க்கைக்கு நான் திரும்பவிரும்பவில்லை. இந்த பிரச்னையில் இதுவே என்னுடைய இறுதி வாக்கியம். பல ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்படுகிறேன். எனினும் வாழு வாழ விடு என அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.