கொங்குப் பகுதியை பின்னணியாக கொண்டு உருவான ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’!


திருமலை புரொடக்ஷன்  கே. கருப்புசாமி தயாரிப்பில், சுகவனம் இயக்கத்தில்  உருவாகியுள்ள புதிய படம், ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’*இப்படத்தில் நல்லபாடனாக ‘பரோட்டா’ முருகேசன் நடிக்க, கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி, சித்ரா, கெளசிகா, தமிழினியன் விகடன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை விமல் கவனிக்க, ‘மூடர்கூடம்’ நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.தமிழகத்தின் தவிர்க்க முடியாத நிலப்பரப்பான கொங்குப் பகுதியை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் குறித்து இயக்குனர் சுகவனம் கூறுகையில், “நிலத்தில் நன்றாக உழைக்கும் பாட்டாளியை நல்லபாடன் என்றும் அழைப்பது கொங்கு வட்டார வழக்கம். இம்மண்ணில் நிலங்களற்று உழைக்கும் மனிதர்களின் கதை தான் இது. ஒண்டிமுனி எனும் சிறு தெய்வத்தை குலதெய்வமாக வழிபடும் மக்கள் இவர்கள். அவர்கள் கொண்ட கடவுள் நம்பிக்கை, ஆதிக்க மனம் கொண்டவர்களின் உழைப்பு சுரண்டல்கள், மனிதர்களின் வாழ்வு முறை, நல்லபாடனின் போராட்டம் உள்ளிட்டவற்றை இப்படம் பேசுகிறது. படம் பார்க்கும் அனைவரையும் ஒரு கிராமத்தில் வாழ்த்த உணர்வை கதை ஏற்படுத்தும். இது மக்களுக்கான கலை, நிச்சயம் மக்களை சென்றடையும் என நம்புகிறேன்,” என்கிறார்.இப்படத்தின் முதல் பார்வையை விஜய் சேதுபதி வெளியிட, டீசரை பா. ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.