நடிகர் தனுஷ் முதன் முறையாக இயக்குனராக களமிறங்கும் படம் பவர்பாண்டி தற்போது ப. பாண்டி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
ப .பாண்டி தனக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் அதுவாகவே தேடிக் கொண்டது. இவ்வாறகவே இப்படத்தின் பவர்பாண்டியும் (ராஜ்கிரண்) எங்களுக்கு கிடைத்தார்“. மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் பற்றி தனுஷ் கூறும்போது,“இப்படத்தின் ஆன்மா ஷான் ரோல்டனின் இசைதான், எனது எண்ணமும் அவரது எண்ணமும் ஒரே திசையில் பயணித்ததே இப்படத்தின் இசை வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம்“. என்று கூறினார்.
இத்தனை வருட காலம் இருந்த ராஜ்கிரனை முற்றிலும் மாற்றி புதிய ராஜ்கிரனை காட்டியுள்ளார். இப்படியொரு கதாபாத்திரத்தை கொடுத்ததற்கு தனுஷிற்கும் என்னுடன் இணைந்து பணியாற்றிய என் குடும்பத்திற்கும் (குழுவிற்கும்) நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
படத்தில் நடித்த பிரசன்னா பேசுகையில்,
“ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையில் மட்டுமே இப்படத்தில் நடித்தேன்.
முதலில் இப்படத்தில் நடிக்க தயங்கிய நான், தனுஷிடம் கதை கேட்டது முதல் அவருடன் வேலை செய்த அணைத்து தருணங்களிலும் மிகப்பெரிய ஆச்சரியத்தை அடைந்தேன். மிகவும் திறமையான நடிகர் தனுஷ் தற்போது ஒரு இயக்குனராக உருவெடுத்து அதில் என்னை நடிக்க வைத்ததற்கு நன்றியை கூறிக் கொள்கிறேன். மேலும் என் இத்தனை வருட திரையுலகில் இப்படத்தை என் தந்தைக்காக அர்ப்பணிக்கிறேன்.” என்று கூறினார்.