இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘டிமான்டி காலனி’ .இப்படத்தல் அருள்நிதி, ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர். ஒரு இரவில் வீட்டிற்குள் நடக்கும் பேய்யின் அட்டகாசம் ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியது. இப்படத்தை தொடர்ந்து ‘டிமான்டி காலனி’ இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனத்தையும் வசூலையும் அள்ளியது. இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், அருள்நிதி, அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் நடித்திருந்தனர்.தற்போது அருள் நிதி நாயகனாக நடிக்கும் இப்படத்தின் மூன்றாம் பாகம் குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறியுள்ளதாவது,”என்னுடைய முதல் படமான ‘டிமான்டி காலனி’ நான் இயக்குநராகப் பணிபுரிவதற்கு முந்தைய கட்டத்தின் பிரதிபலிப்பாகும். ஏனெனில் ‘ஹாரர்’ படங்கள் திரையரங்குகளில் ஒரு பார்வையாளராக எனக்கு அதிக உற்சாகத்தைக் கொடுத்தது. ‘தி எக்ஸார்சிஸ்ட்’, ‘தி ஓமன்’ மற்றும் ‘தி கன்ஜூரிங்’ போன்ற கிளாசிக் ஹாரர் படங்கள் எல்லா சினிமா பிரியர்களுக்கும் என்றென்றும் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும். இதுபோன்ற படங்களின் தாக்கமே தடைகளைக் கடந்து புதிய உலகத்தை உருவாக்க என்னைத் தூண்டியது. அதில்தான் ‘டிமாண்டி காலனி’ என்ற புதிய ஹாரர் வகை ஜானர் படத்தை உருவாக்கினேன்.