கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரருமான நடிகர் அஜித் குமாரிடம் ஏற்கனவே சில காஸ்ட்லீ கார்கள் இருந்தாலும் தற்போது தனது கனவு கார் ஒன்றை வாங்கியுள்ளார். மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும்,ரூ.15 கோடி விலையுள்ள இந்த வகை கார், .உலகத்தில் ஒட்டுமொத்தமாக 500 பேரிடம் மட்டுமே உள்ளது என்கிறார்கள்.இந்த காரின் பெயர் ‘மெக் லாரன் சென்னா’. மறைந்த பார்முலா 1 கார் ரேஸ் வீரர் அயர்டன் சென்னாவின் நினைவாக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. . கார் ரேஸ் வீரர்அயர்டன் சென்னா நடிகர் அஜித்தின் ரோல் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் அயர்டன் சென்னா நினைவுச் சிலை முன் நடிகர் அஜித் ,மண்டியிட்டு கண்ணீர் மல்கஅஞ்சலி செலுத்திய வீடியவைரலானது.குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் நினைவாக இந்த காரை வாங்கி அஜித் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. துபாய் மற்றும் ஐரோப்பிய கார் பந்தயங்களில் பங்கேற்று வெற்றியும் பெற்ற அஜித் . அடுத்தக்கட்ட கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக ஆயத்தமாகி வருகிறார். வருகிற நவம்பர் மாதம் வரை கார் பந்தயங்களில் பங்குபெற முடிவெடுத்துள்ள அஜித், அடுத்ததாக மீண்டும் குட் பேட் அக்லி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.