தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர், தனுஷ். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் கதாநாயகனாக மிகவும் பிசியாக நடித்து வருகிறார். நடிகர் தனுஷ், கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா-லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர்.திடீரென கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்திருந்தனர். அவர்களுக்கு நீதிமன்றம் கடந்த வருடம் விவாகரத்து வழங்கியது.தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும் . சமீபத்தில் மகன் யாத்ரா பள்ளி நிகழ்வில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். தமிழில் தனுஷ் நடித்து இயக்கியுள்ள ‘இட்லி கடை’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சீதா ராமம் படத்தில் கதாநாயகி யாக நடித்து மிகவும் பிரபலமான இந்தி நடிகை மிருணாள் தாகூரை காதலித்து வருவதாகவும் அவருடன் டேட்டிங் செய்து வருவதாகவும் பாலிவுட் மீடியாக்களில் செய்திகள் தீயாக பரவி வருகிறது. இதை உறுதிப்படுத்துவது போல், நடிகை மிருணாள் தாகூரின் பிறந்தநாள் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், அந்த பார்ட்டியில் கலந்துக் கொண்ட தனுஷ், கடந்த வாரம் வெளியான மிருணாள் தாகூரின் சன் ஆஃப் சர்தார் 2 படத்தின் ப்ரீமியர் காட்சியிலும் பங்கேற்றுள்ளார்.இந்நிகழ்வில் தனுஷும் மிருணாள் தாகூரும் கையை பிடித்து பேசிக்கொள்ளும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், ‘இட்லி கடை’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கு நடனமாடி மிருணாள் தாகூர்.ரீல்ஸ் போட்டுள்தாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம் தனுசும்,மிர்னாள் தாகூரும் டேட்டிங் செய்வது உண்மைதான், தற்போது புதுசு என்பதால், ‘லோ கீ’ ஆக யாருக்கும் சொல்லாமல் வைத்திருக்கிறார்கள். விரைவில் இருவது திருமண செய்தி வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என நடிகைக்கு நெருக்கமான ஒருவர் சொன்னதாகவும் இணையத்தில் செய்தி பரவி வருகிறது. ஆனால், நடிகை மிருணாள் தாக்கூரும் தனுஷும் இதுவரை எந்தப் படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த காதல் கிசுகிசு குறித்து தனுஷ் , மிருனாள் தாகூர் இருவரும் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.