டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை மக்கள் நீதி மய்யம் தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான கமல்ஹாசன்.சந்தித்துப் பேசியுள்ளார் .டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார் கமல்ஹாசன். இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக கூறியுள்ள கமல்ஹாசன். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், “மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி. தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.” எனத் தெரிவித்துள்ளார்.