தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் ரூபாய் 1000 கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி அது தொடர்பாக அடுத்தடுத்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . தமிழ் நாட்டில் இச் சம்பவம் பெரும் புயலை ஏற்படுத்தியது . இந்நிலையில்,ஆந்திராவில் அதேபோல் மதுபான விற்பனையில் ஊழல் நடந்துள்ளதாக விசாரணை நடைபெற்று வருகிறது. அங்கு ரூபாய் 3500 கோடிகள் ஊழல் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஊழல், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் போது தான் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் மிகவும் முக்கியமாக சம்மந்தப்பட்டவர்கள் என்று கூறப்படுவது, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ, பாஸ்கர் ரெட்டி மற்றும் அவரது உதவியாளர் வெங்கடேஷ் நாயுடு ஆகியோர் தான். ஆனாலும் இந்த வழக்கில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில்
இவ்விவகாரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ, பாஸ்கர் ரெட்டியின் உதவியாளர் வெங்கடேஷ் நாயுடு மற்றும் நடிகை தமன்னா பிரைவேட் ஜெட்டில் ஒன்றாக பயணம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும், தமன்னாவின் ஒயிட் அன்ட் கோல்ட் நிறுவனம் 300 கிலோ தங்கம் வாங்கியுள்ளது. இந்த தங்கம் வாங்கியதில் இந்த பணம் பயன்படுத்தப்பட்டிருக்குமா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் விசாரணைக்கு ஆஜராகும்படி தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.