பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் ஜி. வி. பிரகாஷ் குமார். அவரது காதலி தேஜு அஸ்வினி. ஒரு நாள் அவர் ஓட்டிவந்த வேனையும் அதிலிருந்த சரக்குகளும் திருடப்பட்டுவிடுகிறது. ஜி.வி. பிரகாஷின் முதலாளி வேட்டை முத்துக்குமார், அவர் மீது சந்தேகம் கொள்கிறார். அதனால், ஜி. வி. பிரகாஷின் காதலி தேஜு அஸ்வினியை கடத்தி தன்னுடைய காட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, திருடப்பட்ட 50 லட்சம் மதிப்புள்ள ஒரு பொருளை கொடுத்து விட்டோ, அல்லது அதற்கு ஈடான தொகையை கொடுத்து விட்டு காதலியை மீட்டுக்கொள்ளுமாறு கெடு வித்திக்கிறார். ஜி.வி.பிரகாஷ் தனது நணபன் ரமேஷ் திலக்குடன் இணைந்து காதலிஅயை மீட்க முடிவு செய்கிறார். இந்நிலையில், தொழிலதிபர் ஸ்ரீகாந்தின் மகளான சிறுமி கடத்தப்படுகிறார். இந்த சம்பவங்களின் பின்னால் இருப்பது யார்? காரணம் என்ன? எனப்த்து தான் ‘பிளாக் மெயில்’.
படம் துவங்கிய முதல் அரை மணி நேரம் ஜி.வி பிரகாஷ் தேஜு அஸ்வினி இவர்களது காதல், கற்பம் என, ஒரே இடத்தில் சுற்றும் கதை, அதன் பிறகு க்ளைமாக்ஸ் வரை, யூகிக்க முடியாத திருப்பங்கள், சுவாரஸ்யம் நிறைந்து ரசிக்கும்படி செல்கிறது. யார், ப்ளாக் மெயிலர்? என்பது தெரிய வரும் ஒவ்வொரு சூழ்நிலையும் ரசிகர்களை வெகுவாக ரசிக்கச் செய்கிறது. தலைப்புக்கேற்றபடி திரைக்கதை சிறப்பு!
ஜி. வி. பிரகாஷ் குமார் கதாபாத்திரத்திற்கேற்றபடி, தனது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களிடம் கைத்தட்டல்களை பெறுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் தேஜு அஸ்வினி படம் முழுவதும் வந்தாலும், நடிப்பினை வெளிப்படுத்த ஒரு சில காட்சிகளே இருக்கன்றன.
ஸ்ரீகாந்த், ஓவ்வொரு முறை ஏமாற்றப்படும் போதும் மனைவி பிந்து மாதவி பிரச்சனையில் சிக்கியது தெரிந்தும், அதை கண்டு கொள்ளாமல் இருப்பது என அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கும் வண்ணம் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஶ்ரீகாந்தின் மனைவியாக காதலனுக்கு பயந்தபடி, குற்ற உணர்ச்சியுடன் கணவனுடன் இருப்பது, குழந்தையை காணாமல் துடிப்பது என அனைத்து காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.
மற்றபடி படத்தில் நடித்த லிங்கா, வேட்டை முத்துக்குமார், ரமேஷ் திலக், ரெடின் கிங்ஸ்லி, ஷாஜி, ஹரி பிரியா ஆகியோரும் தங்களுடைய பங்கினை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ், காட்சிகளுக்கேற்றபடி இசையமைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது.
பிளாக் மெயில் – ஒரு நல்ல சஸ்பென்ஸ், க்ரைம் த்ரில்லர்!