சர்வதேச குற்றப்பிண்ணனி கொண்ட, நிழல் உலக கடத்தல் காரன், தவூத். ரகசியமாக யார் கண்ணிலும் படாமல், மும்பையில் இருந்து கொண்டு, தமிழ்நாட்டில் போதை பொருள் கடத்தலை நடத்தி வருகிறான். இவனது கடத்தல் வேலைகளை, அவன் சார்பில் இரண்டு குழுக்கள் செய்து வருகின்றன. இவனது சாம்ராஜ்யத்தை ஒழிக்கும் வகையில், போலீஸ் தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு கடத்தல் விவகாரத்தில், தவூத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் இரு குழுக்களுக்கு மோதல் உருவாகிறது. இதன் காரணமாக, ரகசியமாக இருந்த தாவூத் வெளியே வருகிறான். அதை, சாதகமாக பயண்படுத்திக்கொள்ள போலீஸ் முயற்சிக்கிறது. இதன் பிறகு என்ன நடந்தது? என்பதே தாவூத்.
கதையின் நாயகனாக லிங்கா நடித்திருக்கிறார். ஆனால், எந்த ஹீரோயிசமும் காட்டாமல், கதையை நகர்த்திச்செல்லும் கதாபாத்திரமாக நடித்துள்ளார். அப்பாவி டாக்ஸி டிரைவராக, அந்தக் கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப நடித்திருக்கிறார். படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளின் கதாபாத்திரமும் அப்படியே உருவாக்கப்பட்டிருக்கிறது. ரௌடி வினோத் முன்னாவின் ஆசை நயகியாக, சாரா ஆச்சர். மற்றபடி பில்டப் கொடுத்தபடியே இருக்கும் சாய் தீனா, திலீபன். மற்றும் அபிஷேக், வையாபுரி, ஜெயக்குமார், ஷாரா, அர்ஜெய், சரவனன் சீலன் உள்ளிட்டோரும் அழுத்தமே இல்லாத கதாபாத்திரங்களாக வந்து செல்கின்றனர்.
இயக்குநர் பிரஷாந்த் ராமனுக்கு இந்துக்களின் மீதும் அந்த கடவுள்களின் மீது வெறுப்பை காண்பித்திருக்கிறார். ஷாரா கதாபாத்திரமும் அவர் செய்யும் செயல்களும் இந்துக்களை இழிவு படுத்தியதாகவே தெரிகிறது.
ராக்கேஷ் அம்பிகாபதியின் இசை ஓகே. சரத் வளையாபதி மற்றும் பிரண்டன் சுஷாந்த் ஆகியோரின் ஒளிப்பதிவும் ஓகே தான்.
எழுதி இயக்கியிருக்கும் பிரஷாந்த் ராமன், வழக்கமான கடத்தல், தாதாக்களின் குற்றப்பிண்ணனி இவைகளைக் கொண்டு யூகிக்க முடியாத, ஆனால், பரபரப்பின்றி நகரும், நேர்த்தியற்ற, அமெச்சூர் வடிவிலான ஒரு திரைக்கதையுடன், தாவூத்தை படைத்திருக்கிறார். மற்றபடி, படத்தில் பெரிதாக சொல்ல எதுவுமில்லை!