தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் பூஜா ஹெக்டே தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படப்பிடிப்பில் அவரது கேரவனுக்குள் அத்துமீறி நுழைந்த பிரபல நட்சத்திர நடிகர் பாலியல் தொல்லையிலும் ஈடுபட்டதாக பூஜா ஹெக்டே கூறியுள்ளது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பூஜா ஹெக்டே சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அந்த பேட்டியில், “நான் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரிய பான் இந்தியா படத்தில் நடித்தேன். அப்போது ஒரு நட்சத்திர ஹீரோ எனது கேரவனுக்குள் என்னை கேட்காமல் நுழைந்துவிட்டார். நுழைந்தது மட்டுமில்லாமல் அத்துமீறி என்னை தொடவும் முயன்றார். நான் உடனே கோபமாகி அவரை கன்னத்தில் அறைந்து வெளியே தள்ளி விட்டேன். நடிகரின் மரியாதையற்ற அந்த அணுகுமுறையால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதை தொடர்ந்து படத்தின் அவருடன் சேர்ந்து நடிக்க மறுத்து விட்டேன் அதன் பின் படமாக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் பாடி-டபுள்களுடன் படமாக்கப்பட்டன, மேலும் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நான் அவரை சந்திப்பதை தவிர்த்து விட்டேன். அதன் பிறகு அந்த ஹீரோ நடிக்கும் படங்களில் நான் பணியாற்றவில்லை” என கூறியுள்ளார்.