ஜூன் 5-ல்  வெளியாகும்   ‘ஹீ-மேன்’ !


‘அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘மேட்டல் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில்,  பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ‘டிராவிஸ் நைட்’ இயக்கியுள்ள ‘மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவர்ஸ்’ , ஒரு காவிய நேரடி அதிரடி அறிவியல் புனைவுக் கதை சாகசமாக மறுவடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில்,நிக்கோலஸ் காலிட்சைன், கமிலா மெண்டிஸ், அலிசன் ப்ரீ, ஜேம்ஸ் பியூர்ஃபாய், மொரீனா பக்கரின், ஜோஹன்னஸ் ஹௌகூர் ஜோஹன்னெசன், சார்லட் ரைலி ஆகியோர் நடித்துள்ளனர்.இவர்களுடன்  ஜாரெட் லெட்டோ மற்றும் இட்ரிஸ் எல்பா ஆகியோரும் நடித்துள்ளனர்.  இப்படம் குறித்து இயக்குனர்  ‘டிராவிஸ் நைட்’ கூறுகையில்,”15 ஆண்டுகளாகத் தனது வீட்டிலிருந்து பிரிந்திருந்த இளவரசர் ஆடம் (நிக்கோலஸ் காலிட்சைன்), மாயாஜால சக்தி வாளால் எடர்னியாவுக்கு மீண்டும் ஈர்க்கப்படுகிறார். அங்கு, ஸ்கெலட்டரின் (ஜாரெட் லெட்டோ) இரக்கமற்ற ஆட்சியின் கீழ் தனது உலகம் சிதைந்து கிடப்பதைக் காண்கிறார்.எடர்னியா அழிவின் விளிம்பில் தள்ளாடும்போது, ஆடம் தனது நெருங்கிய கூட்டாளிகளான டீலா (கமிலா மெண்டிஸ்) மற்றும் டங்கன் / மேன்-அட்-ஆர்ம்ஸ் (இட்ரிஸ் எல்பா) ஆகியோருடன் மீண்டும் இணைகிறார். மேலும், பிரபஞ்சத்தின் மிகவும் சக்திவாய்ந்த மனிதனான ஹீ-மேனாக மாறவும் முடிவு செய்கிறார். இதையடுத்து என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் மீதிக்கதை” என்கிறார்.  இந்நிலையில் இப்படத்தின்   முதல் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்படம்,வரும் ஜூன் 5-ல் தமிழ், ஆங்கிலம், இந்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.