துல்கர் சல்மான், இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட ‘அந்தோனி’  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில்  வாழ்வியல் கலந்த அழகான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அந்தோனி’ . இப்படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டரை, மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் துல்கர் சல்மான், மக்கள் இயக்குநர் சீனு ராமசாமி, ‘சிறை’ திரைப்படக் கதையாசிரியர் தமிழ் ஆகயோர் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்கள். திரைப் பிரமுகர்கள் மனமுவந்து வெளியிட்டதும் வாழ்த்தியதும்
படக்குழுவினரை  மகிழ்ந்து நெகிழ வைத்துள்ளது.எனவே அந்த வெளியீட்டுத் தருணத்தைப் பெருமைமிக்க நினைவாகக் கருதுகிறார்கள்.
‘அந்தோனி’ படத்தின் முதல் பார்வை மற்றும் சில ட்ரெய்லர் காட்சிகள், நடிகர் துல்கர் சல்மானுக்குக் காண்பிக்கப்பட்டது. காட்சிகளைப் பார்த்த . சல்மான்  படக்குழுவை வெகுவாகப் பாராட்டினார். மேலும், இப்படம் சிறப்பான வெற்றியைப் பெற வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்த வாழ்த்து படக்குழுவினருக்கு மேலும் ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. 
‘அந்தோனி’ படத்தை ஜெனோசன் மற்றும் சுகிர்தன் ஆகிய இரு அறிமுக இயக்குநர்கள் எழுதி இயக்கியுள்ளார்கள்.
இவர்கள் இருவரும் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் ஸ்டோன் பென்ச் கம்பனியிலும் மற்றும் சில திரைப்படங்களிலும் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள் .
தற்போது இந்த ‘அந்தோனி’ திரைப்படத்தின் மூலம் திரை உலகில் இயக்குநர் நாற்காலியில் அமர்கிறார்கள். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.அறிமுக இயக்குநர்களான தங்கள் படத்திற்கு இசைஞானி தனது இசை மூலம் செழுமை சேர்த்து இருப்பதை எண்ணி மகிழ்கிறார்கள்.
இப்படத்தில் கயல் வின்சன்ட் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன், டி.ஜே.பானு, சுதர்ஷன், செளமி, அருள்தாஸ், நிழல்கள் ரவி, ஆண்டவன் கட்டளை அரவிந்தன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 
நெய்தல் நிலப் பின்னணியில் கடல் வாழ்வியல், காதல், குடும்ப வாழ்வுடன் , ஆழமான உணர்வுகளையும் இணைத்து, இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. 
இலங்கையில் யாழ்ப்பாணத்திலும் மற்றும் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படம், தற்போது உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.
இப்படத்திற்கு ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் ஏ. பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம் : கலா மோகன்,VFX : AE Studios
உடை வடிவமைப்பு : தரங்கனி ஆதர்ஷ்