இப்படத்தை பற்றி தயாரிப்பாளர் ராஜ கணபதி கூறுகையில் “நாங்கள் திரைப்படத்தை அழகாக எடுத்தோம் ஆனால் தணிக்கைச் சான்றிதழ் வாங்கும்போது தான் மிகவும் சிரமத்திற்கான சுமார் 45க்கும் மேற்பட்ட காட்சியில் வெட்டுகொடுத்தார்கள்.. இதனால் நாங்கள் சுமார் 18 மாதங்கள் கோர்ட் வாசலில் அலைந்து மிக சிரமப்பட்டு தணிக்கை சான்றிதழ் பெற்றோம்.ஒரு வழியாக இப்போது படம் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி திரைக்கு வருகிறது..இப்படத்தில் நான் அம்பேத்கர் வேடத்தில் நடித்துள்ளேன்..இந்த சமுதாயத்தில் நிலவும் அவலங்களை அம்பேத்கர் பேசுவது போல் பேசி நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது..இதன் ஃபர்ஸ்ட் லுக்கை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டது மேலும் எங்களுக்கு மகிழ்ச்சி எங்களுடைய நல்ல படத்தை அனைவரும் திரையில் பார்த்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்..