நடிகை ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா திருமணம். நாளை மறு நாள் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருக்கும் ஐடிசி மொமெண்டோஸ் மாளிகையில் நடக்கவுள்ளது.. இதில் பல திரையுலக பிரபலங்கள் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் கலந்துகொள்ளவுள்ளனர் கடந்த ஒரு மாதமாகவே இவர்களது திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இதுகுறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்காமல் இருந்தார்கள்.இந்நிலையில், நேற்று இரண்டு பேருமே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தங்களது திருமணத்தை உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டனர் .திருமணத்துக்கு தங்கள் இருவரின் பெயரையும் இணைத்து விரோஷ் என பெயரிட்டு இருந்தனர் . இந்நிலையில் இருவரும் நேற்று தங்கள் குடும்பத்துடன் உதய்பூருக்கு சென்றடைந்தார்கள். அங்கே அவர்களுக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இவர்களது திருமணம் நடக்கவுள்ள ஆரவல்லி மலை தொடர்களுக்கு நடுவே அமைந்து பார்க்கவே ரம்யமாக இருக்கும் ஐடிசி மாளிகைக்கு ஒரு நாளைக்கு 91,000 ரூபாய் வாடகை என்கிறார்கள். இந்நிலையில்,தற்போது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. இதில் நேற்று ,இரவு நெருங்கிய நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் மணமக்கள் நடத்திய ஒரு மிதக்கும் பார்ட்டியில் விஜய் தேவரகொண்டா தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வாலிபாலும் விளையாடினார். அதேபோல் ஏகப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பான புகைப்படங்களை விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் தங்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளனர் அதிநவீன மெழுகுவர்த்தி ஏற்றி தங்க நிற ஒளியால் ஒளிரும், இளஞ்சிவப்பு நிற லில்லி மலர்கள் மற்றும் பச்சை ஹைட்ரேஞ்சாக்களால் அலங்கரிக்கப்பட்ட தோட்டத்தால் ஈர்க்கப்பட்ட சூழலில் ஜப்பானிய ஸ்டைலில் இரவு உணவு வழங்கப்பட்டது . நிகழ்வை மேலும் சிறப்பாக்கும் வகையில், ஒவ்வொரு விருந்தினரின் மேஜையிலும் ராஷ்மிகா, விஜயதேவரகோண்டா ஜோடியின் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட புனைப்பெயரான ‘விரோஷ் என எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஒரு கண்கவர் பச்சை நாப்கின் வைக்கப்பட்டு இருந்தது. இன்று மெஹந்தி விழாவுடன் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. இதில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். அதை தொடர்ந்து விதவிதமான புதிய பழங்களால் நிரப்பப்பட்ட, அழகிய கண்ணைக் கவரும் ப்ளஷ் பிங்க் லில்லி மற்றும் பச்சை ஹைட்ரேஞ்சாக்களின் நறுமண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பாரம்பரிய அழகியலில் வேரூன்றிய ஹால்டி விழா மற்றும் சங்கீத் கொண்டாட்டங்கள் நாளை திட்டமிடப்பட்டுள்ளன, இது குறித்த புகைப்படங்களை ராஷ்மிகா மந்தனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பகிர்ந்துள்ளார் .அதில்,விஜய் தேவரகொண்டா, நண்பர்களுடனான ஒரு நீச்சல் குளத்தில் கைப்பந்து போட்டியில் பங்கேற்றுள்ளது போன்ற ஒரு காட்சியும் இடம்பெற்றுள்ளது..அதைத்தொடர்ந்து பிப்ரவரி 26 ஆம் தேதி திருமண விழாவிற்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் கண்டிப்பாக தனிப்பட்ட முறையில், தெலுங்கு மற்றும் கூர்க் சம்பிரதாயப்படி நடைபெறும் என்றும், விருந்தினர் பட்டியல் வரையறுக்கப்பட்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.திருமண சடங்குகள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்பாளர்கள் பற்றிய குறிப்பிட்ட விவரங்கள் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தாலும், திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.திருமணத்தை முடித்துவிட்டு ஒரு மாதம் அவர்கள் ஹனிமூனுக்கு பிளான் செய்திருக்கிறார்களாம். அதுவரை சினிமா, சோஷியல் மீடியா என அத்தனையிலிருந்தும் விலகியிருக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ராஷ்மிகா வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில், நாங்கள் எந்த திட்டத்தையும் போடுவதற்கு முன்பே; எதையும் தேர்வு செய்வதற்கு முன்பே நீங்கள் ஏற்கனவே எங்களுடன் இருந்தீர்கள். அளவற்ற அன்புடன் எங்களுக்கு நீங்கள் ஒரு பெயரையும் கொடுத்தீர்கள். எங்களை விரோஸ் என்றும் அழைத்தீர்கள். அதனால் இன்று நிறைந்த மனதுடன் உங்கள் அன்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக; நாங்கள் இணைவதை ஒரு பெயரில் அழைக்க விரும்புகிறோம்.எங்கள் இரண்டு பேரையும் இவ்வளவு அன்புடன் தாங்கி நிற்கும் உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி. நீங்கள் எப்போதும் எங்களின் ஒரு பகுதியாகவே இருப்பீர்கள்” என தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.