அபர்ணதி முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘வெஞ்சென்ஸ்’ !

ஏசி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ. பி. அசோக்குமார் தயாரிப்பில் ராகுல் அசோக் இயக்கத்தில் அபர்ணதி முதன்மை வேடத்தில் நடிக்கும் பரபரப்பான அரசியல் திரைப்படம் ‘வெஞ்சென்ஸ்’

காளி வெங்கட், ஜான் விஜய், இளவரசு, லிவிங்ஸ்டன், ஒய்.ஜி. மகேந்திரா முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் ‘வெஞ்சென்ஸ்’ மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது

கார்த்திக் ராஜா இசையில், அருண் ராஜ் பின்னணி இசையில், எம். எஸ். பிரபு ஒளிப்பதிவில் உருவாகியுள்ள ‘வெஞ்சென்ஸ்’

ஏசி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ. பி. அசோக்குமார் தயாரிப்பில் ராகுல் அசோக் இயக்கத்தில் அபர்ணதி முதன்மை வேடத்தில் நடிக்கும் பரபரப்பான அரசியல் திரைப்படத்திற்கு ‘வெஞ்சென்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவரையில் இல்லாத சவாலான பாத்திரத்தை இப்படத்திற்காக அபர்ணதி ஏற்றுள்ளர்.

காளி வெங்கட், ஜான் விஜய், இளவரசு, லிவிங்ஸ்டன் மற்றும் ஒய்.ஜி. மகேந்திரா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் ‘வெஞ்சென்ஸ்’ திரைப்படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தை மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

‘வெஞ்சென்ஸ்’ திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் ராகுல் அசோக், “ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும், அவர் எதிர்கொள்ளும் சவால்களையும் அரசியல் பின்னணியில் இப்படம் அலசுகிறது. அனைத்து நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். தரமான திரைப்படங்களுக்கு ஆதரவளிக்கும் தமிழ் ரசிகர்கள் ‘வெஞ்சென்ஸ்’ படத்திற்கும் தங்கள் நல்லாதரவை அளிப்பார்கள் என நம்புகிறேன்,” என்றார்.

சினிமா மீது கொண்ட பற்று காரணமாக குறும்படங்களை இயக்கியுள்ள ராகுல் அசோக், ‘வெஞ்சென்ஸ்’ மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. ‘வெஞ்சென்ஸ்’ படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்க எம். எஸ். பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். பின்னணி இசைக்கு அருண் ராஜ் பொறுப்பேற்க இம்ரான் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்கம்: வைரபாலன்.

ஏசி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ. பி. அசோக்குமார் தயாரிப்பில் ராகுல் அசோக் இயக்கத்தில் அபர்ணதி முதன்மை வேடத்திலும் காளி வெங்கட், ஜான் விஜய், இளவரசு, லிவிங்ஸ்டன், ஒய்.ஜி. மகேந்திரா முக்கிய பாத்திரங்களிலும் நடிக்கும் பரபரப்பான அரசியல் திரைப்படம் ‘வெஞ்சென்ஸ்’ மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.

***