இந்நிகழ்வில் நடிகர் பிரசாந்த் பேசுகையில்,
”இங்கு வருகை தந்திருக்கும் என்னுடைய நண்பர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. சென்னையில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் தொடங்கி இது 18 ஆம் ஆண்டு. இன்றைய நாளில் கூடுதல் சிறப்பு அம்சமாக ஒரு பணியை ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தினர் தொடங்கியிருக்கிறார்கள்.
பொதுவாக கல்யாணம் பண்ணிப் பார் என்பார்கள். அதற்கும் ஜோய் ஆலுக்காஸ் தங்களுடைய பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். அதை தொடர்ந்து வீட்டை கட்டிப் பார் என்றும் சொல்வார்கள் அதற்கும் ஜோய் ஆலுக்காஸ் தங்களுடைய பங்களிப்பை இன்று தொடங்கி இருக்கிறார்கள். அதனை ஜோய் ஹோம்ஸ் என்று தொடங்கி இருக்கிறார்கள்.
வீடில்லாத…நிலமில்லாத.. தமிழகம் முழுவதும் உள்ள மிகவும் கஷ்டப்படும் ஐம்பது குடும்பத்தினரை தேர்வு செய்து ஒரு தரமான – அருமையான – வீட்டை அவர்களுக்கு இலவசமாக கொடுத்திருக்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் வீடு என்பது உரிமை. அது ‘எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது’ என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் வழிவகுத்திருக்கிறது. இதற்காக நான் அவர்களை மனமார பாராட்டுகிறேன். இது மிகப்பெரிய சந்தோஷம்.
வீடு மட்டுமல்லாமல் மக்கள் எங்கெங்கு கஷ்டப்படுகிறார்களோ..! புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றாலும்… அவர்களை தேடிச்சென்று மருத்துவ உதவி செய்கிறார்கள். இந்த கை உதவி செய்வதை அந்த கைக்கு தெரியாமல் செய்கிறார்கள். அந்த குடும்பத்தினர் முழுவதும் பொதுமக்களின் நன்மைக்காக தொடர்ந்து சேவை செய்து வருகிறார்கள். அதிலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இதனை தொடர்ந்து செய்து வருவது சாதாரண விசயம் அல்ல மிகப் பெரிய விசயம்.
நான் அனைவரிடமும் சொல்வது என்னவென்றால் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் உரிமையாளரான ஜோய் தொலைநோக்கு சிந்தனை உள்ளவர். மனிதநேயமும் அன்பும் அக்கறையும் கொண்டவர். சிறந்த ரோல் மாடல்.
தனி ஆளாக நின்று கடுமையாக உழைத்து இன்று ஜோய் ஆலுக்காஸ் எனும் பிரம்மாண்டத்தை உருவாக்கி இன்றும் எளிமையாகவும் பணிவாகவும் இருப்பவர். இது தொடக்கம் தான். இன்னும் ஐந்தாண்டுகளில் இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை இன்னும் விரிவடையும். ஜோய்ஸ் ஹோம் திட்டத்தில் வீடுகளை பெறும் பயனாளிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.