இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றி. கே பி சார் பட்டறையில் பணியாற்றி கொண்டிருக்கிறோம். எல்லோரும் வருவார்கள். எழுதுவார்கள். ஆனால் செந்தமிழனின் எழுத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். ‘மைக்ரோ தொடர்கள் மேக்ரோ சிந்தனைகள்’ என்று ஒரு தொடர் சென்று கொண்டிருந்தது. கைலாசம் சார் செந்தமிழனை தொடர்ந்து எழுதச் சொல் என சொல்வார், அவ்வளவு தரமான ஒரு எழுத்தாளர் செந்தமிழன்.
மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் தற்சார்பு வாழ்க்கையை யார் வாழ்கிறார்களோ அவர்கள்தான் மிகப்பெரிய செல்வந்தர்கள். அவர்கள் தான் மிகவும் சந்தோஷமானவர்கள். இதை சொல்ல வருவது தான் இந்த ‘கார்மேனி செல்வம்’ படைப்பு.
இறைவனை நோக்கி காரைக்கால் அம்மையார் எழுதிய பாடல்களை அதே ஸ்ருதியில் இன்றும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு நாங்களும் சென்றோம். அதைப் பார்த்த இயக்குநர் ‘தேவலோகத்தில் இருக்கிறோமோ..!’ என்று தன் உணர்வை பகிர்ந்து கொண்டார். நாங்கள் இருவரும் வேறு ஒரு உலகத்தில் மிதந்தோம்.
பணக்காரன் வேறு. செல்வந்தர் வேறு. பணக்காரன் பிரச்சனைகளோடு இருப்பவன். செல்வந்தர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பவர். உங்கள் அனைவரையும் செல்வந்தர் ஆக்குவது தான் இந்தப் படம். இந்த படைப்பில் இது போன்ற நிறைய விஷயங்களை பேசி இருக்கிறோம்.
‘கார் மேனி செல்வம்’ சாதாரண திரைப்படம் மட்டுமல்ல. நாங்கள் இல்லாமல் போகலாம், ஆனால் இந்த படைப்பு இருக்கும். உங்களுடன் எப்போதும் இருக்கும்.
நிறைய சுமைகளை தூக்காதீர்கள். இ எம் ஐ என்ற பெயரில் சுமைகளை சுமக்காதீர்கள். அதன் பிறகு நடக்கக்கூட முடியாது. அந்த சுமையை சிறிது சிறிதாக இறக்கி வைத்து விட்டு, கை வீசி சந்தோஷமாக நடந்து பாருங்கள். மகிழ்ச்சியை உணர்வீர்,” என்றார்.