இந்நிலையில் ராம் சரண் பிறந்தநாள் மற்றும் ராம நவமி பண்டிகையை முன்னிட்டு,இப்படத்தின் அட்டகாசமான க்ளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதில் கட்டுமஸ்தான குஸ்தி வீரனாக மாஸ் காட்டும் ராம் சரண்,’மல்யுத்தம் என்பது கிரிக்கெட் போல பந்தையும் பேட்டையும் எதிர்கொள்ளும் விளையாட்டு அல்ல… நேரடியாக மரணத்தையே எதிர்கொள்ளும் விளையாட்டு” என்றும், களத்தில் தனது மீசையை முறுக்கியபடி, “என் திமிரு தான்டா என் ஆட்டம்” என்று கர்ஜிக்கும் காட்சிகளும் அவரது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.