இந்த பரபரப்பு ஓய்வதற்குள் சென்னை திருவான்மையூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்யும் நடிகை திரிஷாவும் ஒரே மாதிரியான உடைகளை அணிந்து கொண்டு கலந்து கொண்டது சமூக வலைத்தளத்தில் பெரும் பேசுபொருளாக மாறி, சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில் தான் மும்பை செல்வதற்காக இன்று, சென்னை விமான நிலையம் வந்திருந்த நடிகை திரிஷாவிடம், இந்த சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர் மவுனமாக சென்றது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து 43 வயதாகும் முரட்டு சி ங்கிளாக வலம்வரும் திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ,திருமணத்துக்கு தயாராகும் மணப்பெண் போல காட்சியளிக்கும் தனது ‘செல்பி’ புகைப்படத்தைப் பகிர்ந்து, பூமாலையே தோள் சேரவா போன்ற பாடலைப் இணைத்து அடுத்த பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கிடையே திரிஷாவின் அம்மா உமா,திரிஷா மற்றும் விஜயயை இணைத்து நெட்டிசன் போட்ட பதிவு ஒன்றுக்கு லைக் கொடுத்து தன் பங்குக்கு கூடுதல் பரபரப்புக்கு பஞ்சம் வராமல் பார்த்து கொண்டார் இதையடுத்து திரிஷாவின் இன்ஸ்டா பதிவுகள் மூலம் எதையோ மறைமுகமாக சொல்ல வருகிறாரோ என்ற எதிர்பார்ப்பு நெட்டிசன்கள் பலரையும் அவரின் இன்ஸ்ட்டா பதிவுகளை உற்றுநோக்கவும் காத்திருக்கவும் வைத்துள்ளது..
இந்நிலையில் இப்போது அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் இரண்டு குரங்குகளின் புகைப்படங்களை வைத்திருக்கிறார். மேலும் அதில், தன் காதலியை பாதுகாக்க, ஒரு குரங்குடன் சண்டையிட்டு அதை விரட்டுகிறான். ஜென்டில்மேன் என குறிப்பிட்டிருக்கிறார்.
திரிஷாவின் சூசக பதிவு , இந்த பொண்ணு என்ன தான்யா சொல்ல வருது என பலரையும் ‘சுத்தலில்’ விட்டுள்ளது