கேரள மாநிலம் பாலக்காடு கோவை- கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலக்காடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள வீ.டி. பட்டத்திரிப்பாடு நினைவகத்தில், மலையாள திரைப்பட பின்னணி பாடகர்கள் சங்கமான ‘சமம்’ மற்றும் ‘ஸ்வரலயா’ கலை அமைப்பின் கூட்டு முயற்சியில், மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்துக்கு 10 அடி உயரமுள்ள கண்ணாடி உலோக உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. கண்ணூர் பையனூரைச் சேர்ந்த ‘சிற்பி’ கானாயி உன்னி வடிவமைத்துள்ள இந்த சிலையை ஆஸ்கார் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் கீரவாணி திறந்து வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய திரைப்பட பாடகர்கள் சித்ரா, சுஜாதா, ஹரிஹரன், உன்னி மேனன், ஸ்ரீநிவாஸ், விஜய் யேசுதாஸ், எஸ்.பி.பி. சரண், பல்லவி ,மனோ, மதுபாலகிருஷ்ணன், சுதீப் குமார், ரவிசங்கர், நடிகர் ஒய் ஜி மகேந்திரன் உள்பட தென்னிந்திய திரையுலகின் முன்னணி கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்