சினிமா ரசிகர்களிடையே இன்றும் தனி இடம் பிடித்துள்ள ‘செல்லமே’ மற்றும் ‘ஆனந்த தாண்டவம்’ போன்ற படங்களில் தனது தனித்துவமான கதை சொல்லலுக்காகப் புகழ்பெற்ற இயக்குநர் காந்தி கிருஷ்ணா, ’பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படம் மூலம் கம்பேக் கொடுக்கிறார். இந்த ரொமாண்டிக் கதையில் பிக்பாஸ் புகழ் ராணவ் மற்றும் ரோஸ்மின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீடு குறித்த விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*நடிகர்கள்:* ராணவ் , ரோஸ்மின், சம்பத் குமார், கஸ்தூரி, அர்ச்சனா, கிருத்திக் மோகன் மற்றும் அமிதா ரங்கநாத்.
*தொழில்நுட்பக்குழு விவரம்:*
எழுத்து, இயக்கம்: Ar. காந்தி கிருஷ்ணா,
தயாரிப்பு: கிரிஜா வரதராஜ்,
தயாரிப்பு பேனர்: பிரேம் கிளாசிக் பிக்சர்ஸ்,
இசை: ஜிவி பிரகாஷ்,
ஒளிப்பதிவு: எம்.வி. பன்னீர் செல்வம்