“ஐ ஆம் கேம்” படம், துல்கர் சல்மானின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய படமாக உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற “லோகா” படத்திற்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் வழங்கும் அடுத்த முக்கிய படமாககும். இந்தப் படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். கதையை ஷஹாபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து எழுதியுள்ளனர்.
“ஐ ஆம் கேம்” படம் துல்கரின் திரை வாழ்க்கையில் மட்டுமல்லாமல், மலையாள சினிமாவிலேயே மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக உருவாகி வருகிறது. மேலும், இது மிகப்பெரிய வெளியீடாகவும் அமைவயவுள்ளது. இந்த படத்தில் துல்கர் சல்மான் ஸ்டைலிஷான மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். “RDX” என்ற பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய பிறகு, நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இந்தப் படம், துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாகும்.
“ஐ ஆம் கேம்” படத்தில் ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகரும் இயக்குனருமான மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர்.
“ஐ ஆம் கேம்” படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் முன்பே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. “ஐ அம் கேம்” திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது.