இயற்கையுடன் இணைந்த பயணமும் இசையுமே சிறகு
இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம். சென்னையில் தொடங்கும் இப்பயணம் கன்னியாகுமரி வரை நீள்கிறது.எல்லோரும்இயந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் இயற்கையோடு இயைந்தபயணமும் இசையுமே புத்துணர்வைக் கொடுக்கும் என்கிறது 'சிறகு'. 'மெட்ராஸ் ', 'கபாலி', 'வடசென்னை ', 'சண்டைக்கோழி-2 ', 'பரியேறும் பெருமாள் ', ஆகியபடங்கள் மூலம் நமக்கு அறிமுகமான ஹரி கிருஷ்ணன் இப்படத்தின் நாயகன். நடனத்திலும், யோகாவிலும் சிறந்த, அழகிய இளம் அக்ஷிதா இப்படத்தின் நாயகியாகிறார் ...