2.இளையராஜா- பாக்யராஜ் மோதல்.!
என்ன காரணத்தால் அந்த மோதல் வந்ததோ ,அதைதோண்டி எடுத்து இன்று போஸ்ட் மார்ட்டம் பண்ணுவது அந்த இரண்டு ஜாம்பவான்களையும் அவமதிப்பது போலாகிவிடும். இசைஞானி என்னுடன் நல்ல நட்புடன் ...
என்ன காரணத்தால் அந்த மோதல் வந்ததோ ,அதைதோண்டி எடுத்து இன்று போஸ்ட் மார்ட்டம் பண்ணுவது அந்த இரண்டு ஜாம்பவான்களையும் அவமதிப்பது போலாகிவிடும். இசைஞானி என்னுடன் நல்ல நட்புடன் ...
,"இசைக்கலைஞர்களே ஒரு புதிய அறிவிப்பு," என்று வீடியோ வழியாக ஒரு எச்சரிக்கையை அறிவித்திருக்கிறார் .இசைஞானி இளையராஜா. என்னுடையபாடல்களை என் முன் அனுமதியில்லாமல் பாட விரும்பும்இசைக்கலைஞர்கள் என்னிடம் முன் அனுமதி பெற்றுஅதற்குரிய விஷயங்களை முறைப்படி செய்துவிட்டு,அதன்பின் பாடவேண்டும் இல்லையென்றால் அது சட்டப்படி குற்றமாகும். அப்படிசெய்வது தவறு என்பதை நீங்கள் உணரவேண்டும். அப்படிசெய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைதெரிவித்துக்கொள்கிறேன். இதுவரை ஐ.பி.ஆர்.எஸ்சில் நான் உறுப்பினராகஇருந்தேன். இப்போது ஐ.பி.ஆர்.எஸ். இல் உறுப்பினராகஇல்லாத காரணத்தால், இதுவரை என் சார்பாக வசூலித்துவந்த ராயல்டி தொகையை இனி தென்னிந்திய திரைப்படஇசைக்கலைஞர்கள் சங்கம் வசூலிக்கும். நான் அவர்களுக்குஅந்த உரிமையை வழங்கி இருக்கிறேன். எல்லாரும் இந்த விஷயத்தை சரியாக புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் பாடுவதற்கு நான் இடைஞ்சல் செய்யவில்லைஎன்பதை நீங்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள்வாங்குகின்ற பணத்திற்குதான் ராயல்டி தொகையே தவிர,நீங்கள் பாடுகிற பாடலுக்கு ராயல்டி தொகை இல்லை. நீங்கள் பாடுவது இலவசமாக பாடினால், இலவசமாக பாடிவிடலாம், பணம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.இதை சரியாக புரிந்துகொள்ளுங்கள், இது ஒரு சின்னவிஷயம். பணம் வாங்குகிறீர்கள் அல்லவா, சும்மாவாகச்சேரி செய்கிறீர்கள். என் பாட்டிற்கு பணம்வாங்குகிறீர்கள், அந்த பணத்தில் எனக்கு பங்கு இல்லையா.பாட்டே எனது என்கிறபோது, பங்கு எப்படி எனது இல்லாமல்போகும்."என்று கேட்டிருக்கிறார்.
© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani