ஆர். சந்துரு தயாரிப்பில், ராஜ்மோகன் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் – டார்லிங் கிருஷ்ணா தந்தை-மகனாக நடித்துள்ள ‘ஃபாதர்’ (Father) திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பிசினஸ் வட்டாரத்தில் ஒரு அதிரடித் திருப்பமாக, பிரபல விநியோக நிறுவனமான மேசிஸ் புரொடக்ஷன்ஸ் (Macis Productions) இத்திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு விநியோக உரிமையை வாங்கியுள்ளது.
பல குடும்பங்களில் தந்தைகள் தங்களது அன்பை வெளியில் காட்டாமல் தியாகங்கள் மூலமே வெளிப்படுத்துகிறார்கள். அன்பிருந்தும் அதை ஒருவருக்கொருவர் சரியாக வெளிப்படுத்தத் தெரியாத ஒரு அப்பாவிற்கும், மகனுக்கும் இடையே நடக்கும் எமோஷனல் பயணமே இப்படம்.
“டீசர் என்பது ஒரு சிறிய சஸ்பென்ஸ் மட்டும்தான், முழுத் திரைப்படம் ரசிகர்களுக்கு இன்னும் ஆழமான உணர்வுப்பூர்வமான தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும்” என இயக்குநர் ராஜ்மோகனும், தயாரிப்பாளர் ஆர். சந்துருவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.
வெளியான டீசரில் பிரகாஷ் ராஜின் மிரட்டலான முகபாவனைகளும், டார்லிங் கிருஷ்ணாவின் எதார்த்த நடிப்பும் இப்படத்தின் மிகப்பெரிய பலமாகக் கருதப்படுகிறது. மேசிஸ் புரொடக்ஷன்ஸின் பலத்தோடு உலகெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள ‘ஃபாதர்’ படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பாடல்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.












