
காலன் எப்போது கதவைத் தட்டுவான் என்கிற அச்சத்தில் ஒடுங்கிப் போய் இருக்கின்றன ,உலக நாடுகள்.
இந்த செய்தியை பதிவு செய்கிறபோது எமக்கு கிடைத்த தகவலின்படி 649 பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது
கொரானா கொடிய ,கொள்ளை நோயினை சற்றே மறந்து…
திரைப்பட செய்தியைப் பற்றியும் சிறிது சொல்வோம்.அதாவது நினைவு படுத்துகிறோம்.
தமிழ்ச்சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
11 மாதங்கள் இடைவெளி கடந்து 2011-ல் மீண்டும் தனது திக் விஜயத்தை தொடங்கினார்.
இன்று வரை அசைக்க முடியாத இடத்தில் அமர்ந்திருக்கிறார்.
எந்த ஹீரோவாக இருந்தாலும் கதையில் தனக்கு எந்த அளவுக்கு முக்கியம் இருக்கிறது என்பதை முன்னதாகவே தெரிந்து கொள்கிறார். அதன் பின்னர்தான் நடிப்பதும் மறுப்பதும்.!
ஒரு ஆங்கில பத்திரிகையில் அவர் சொன்னதாக வந்த பதிவுதான் இனி நீங்கள் படிக்கவிருப்பது…
“வெற்றியை தலை மீது ஏற்றிக்கொள்கிற ‘ரகத்தை’ சேர்ந்தவள் நான் இல்லை.!
எப்பவுமே எனக்கு ஒரு பயம் …நான் நல்ல படங்களை கொடுக்கவில்லையோ என்கிற அந்த பயம் என் கூடவே இருக்கிறது.
எல்லா கேரக்டர்களிலும் ,எல்லா நேரங்களிலும் அதிகாரங்களை ஆண்கள் மட்டுமே வைத்துக் கொள்வது ஏன் ?
கமாண்டிங் ரோல்களை நம்மாலும் பண்ண முடியும் என்கிற நம்பிக்கை பெண்களுக்கு வரவேண்டும்.
அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.! அதையே செய்கிறேன்.!!
இதில் ஆண் ,பெண் என பேதம் பார்க்காதீர்கள்.!
நீ சொல்வதை நான் கேட்கிறபோது ,நான் சொல்வதை நீ கேட்கக்கூடாதா?
என்னை மய்யமாக வைத்து எடுக்கிற படங்களை பற்றிய முடிவுகளை நானேதான் எடுக்கிறேன்.கதையை கேட்டு விட்டுத்தான் முடிவு எடுக்கிறேன்.அந்த கதையில் டைரக்டர்கள் சில துணைக்கதைகளை சேர்க்கிறபோது அது அந்த கதைக்கு தேவைதானா என்பதையும் கேட்பேன்!”என்கிறார் லேடி சூப்பர்ஸ்டார்.












