
பிரபல விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ்.
தண்ணீர்த் தொட்டியில் அமிழ்ந்து கிடந்தபோது வெளியேறிய தண்ணீரின் அளவு அவனது சிந்தனையில் சுருக்கென பட்டிருக்கிறது
“யுரேகா” என்று கத்தியபடியே நிர்வாணமாக ஓடினான் என சொல்லுவார்கள். யுரேகா என்றால் கண்டுபிடித்துவிட்டேன் என அர்த்தமாம்.
குஷ்புவின் டிவிட்டர் பதிவு யுரேகா என்றுதான் ஆச்சரியக்குறியுடன் தான் இன்று பதிவாகியிருக்கிறது.
பிரதமர் மோடியின் விளக்கேற்றுங்கள் என்கிற கோரிக்கை இன்று விவாதமேடையின் கருப்பொருளாகி இருக்கிறது.
நேற்று மக்கள் நீதி மய்யம்,பொதுவுடமைக்கட்சியை சேர்ந்தவர்கள் பிரதமரின் பேச்சை கிண்டல் செய்திருந்தார்கள்.
இன்று காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் குஷ்பு சுந்தர்…
“யுரேகா.. இந்த மாதிரி விளக்கேற்றினால் கொரானா ஓடிப்போய் விடுமா? விளக்கு ஏற்றுகிறேன் என்று யாரும் வீட்டை விட்டு வெளியே வந்து விடாதீர்கள். இடை வெளி முக்கியம்.கவனமாக இருங்கள்” என்பதாக டிவீட் பதிவு செய்திருக்கிறார்.
விளக்கேற்றுவதற்கும் கொரானாவுக்கும் என்ன தொடர்பு? ஜோதிட ரீதியாக ஏதாவது இருக்குமோ? மின்சார விளக்கை அணைத்து விட்டு டார்ச் லைட் அடிப்பதில் என்ன தெரியப்போகிறது?












