
“ஜவ்வாது மேடையிட்டு ,
சர்க்கரையில் பந்தலிட்டு ,
செவ்வாழைக் காலெடுத்து வா,,வா..
செம்மாதுளைப் பிளந்து தா..தா. ” என பாடி எவரால் கவர்ந்து செல்லப்போகிறாரோ இந்த மல்லிகை மோகினி நிவேதா தாமஸ். தர்பார் படம் பார்த்த பாதி விடலைகள் வியர்த்துப் போனது இவரைப் பார்த்துத்தான்!
“இப்ப என்ன அவசரம் கல்யாணத்துக்கு?” என்கிறார் .ஒரே போடு.!
ஒரு பெண்ணால் கல்யாணம் பண்ணாமல் இருக்க முடியுமா?
“காதலும் கல்யாணமும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான விஷயம்தான். எனக்கு இப்ப அந்த இரண்டும் அவசரம் இல்ல.காதலிக்க நேரமில்லை. அதுக்கேத்த சரியான ஆள் கிடைக்கணுமே! கல்யாணம் பண்ணிக்கொள்ளும் எண்ணம் இப்ப இல்ல.! ஆனால் அதற்கும் ஒரு நேரம் வரும் .அப்போது நடக்கும்.”
இப்ப என்ன பண்றதாக உத்தேசம்?
“வித்தியாசமான படங்கள் .திறமைக்கு சவால் விடுற மாதிரியான கேரக்டர்கள்.அப்பறம் டைரக்சன் .இது என்னுடைய ஆசை.!”என்கிறார் நிவேதா தாமஸ்












