
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபின்னர் கையெழுத்திட்ட மக்கள் நலத்திட்டங்களை பல துறைகளிடம் இருந்தும் மக்களிடம் இருந்தும் ஆதரவுகள் குவிந்து வருகின்றன.
குறிப்பாக இயக்குநர் ஷங்கர் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.
அரசியல்வாதிகளின் நற்செயலை பாராட்டிவிட்டால் எங்கே கட்சி முத்திரை குத்தி விடுவார்களோ என்கிற பயம் அவருக்கு இருக்கிறது. ஆனால் தற்போது துணிந்து முதல்வர் ஸ்டாலினை பாராட்டி இருக்கிறார்.
“நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். பதவி ஏற்றதும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிற கொரானா நோயாளிகள் மருத்துவ செலவுகள் குறித்த அரசாணையில் கையெழுத்திட்டிருப்பது வரவேற்புக்குரியது.பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவசப்பயணம் என்பது வரவேற்புக்குரியது” என வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்திருக்கிறார்.












