
“அமெரிக்க,இஸ்ரேல் -ஈரான் யுத்தம் எக்கேடோ கெட்டு ஒழியட்டும்.நாங்க எங்க விஜய்யை விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று த.வெ,க ,நண்பிகள் கிளம்பியிருப்பதைப் பார்த்தால் தமிழர் பண்பாடு என்பது இற்றுப் போய்விடுமோ என்கிற பயம் வந்து விட்டது.
புருஷனை விட விஜயண்ணா தான் முக்கியம் ,படிப்பு தேவையில்லை ,அத பிறகு பாத்துக்கலாம் ,இப்ப விஜய பார்ப்பதுதான் முக்கியம் ,புருசனுக்கு விஷம் வச்சு கொன்னுடுவோம் போன்ற செயல்திட்டங்களை கையில் வைத்திருக்கிறது விஜய்யின் நண்பீஸ் வட்டம்.
இப்போது மிக மிக கொடுமையான மன நிலைக்கு அந்த நண்பீஸ் வட்டம் தள்ளப்பட்டிருக்கிறது.
சங்கீதாவை திமுகதான் தூண்டி விட்டிருக்கிறது ,என்று அரசியல் சாயத்தை பூசிக்கொண்டிருக்கிறார்கள் சில ஊடக புலிகள். அவர்களுக்கு விஜய்யின் நண்பரும் தயாரிப்பாளருமான ஜெகதீஸ் அன்பான கோரிக்கை வைத்து கவனித்திருக்கிறார் என்கிறார்கள். இதனால் சில ஊடகத்தினர் விஜய்யின் பரிசுத்தம் பற்றி சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் முகநூல் பக்கத்தில் இரண்டு நண்பீஸ் தங்களை மறந்து வெகு ஆவேசமுடன் பேசியவை எவ்வளவு இழிவானவை என்பதை அவர்கள் உணரவில்லையே என்கிற கோபம் வரவே செய்தது.
“அவ போனா போகட்டும் நான் இருக்கேன் “என்கிற ரீதியில் பச்சையாக பேசி இருந்தார்கள் . சில உறவுகள் புனிதமானவை .அவைகளை பூப்போட்டு வணங்கத்தக்கவை ,ஆனால் அந்த நண்பீஸ் ஆவேசமுடன் பேசியவை அருவெறுப்பானவை. பதவிக்காக கொலை செய்யவும் தயங்கேன் என ஒருவர் பேசியது முகநூலில் பார்த்தவைதான்.”அக்காவா இருப்போம் தங்கச்சியாக இருப்போம் ,பொண்டாட்டியாகவும் இருப்போம் ” என்று அந்த இரண்டு சகோதரிகளை பேச வைத்ததே விஜய்யின் டீம் தான் என்கிறார்கள். இவ்வளவு கேவலமாக இறங்குவார்கள் என எதிர்பார்க்கவில்லை.
தலைவர் விஜய் கவனிப்பார்! என நம்புவோம்.












